கொட்டாம்பட்டி - கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி, வேலாயுதம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு திருச்சி காவிரி திட்ட குடிநீர் வீணாகிறது.உடைப்பு வழியாக கழிவுநீர் கலக்கிறது. இதனால் கொட்டாம்பட்டி பகுதிக்கு சப்ளையாகும் குடிநீர் சுகாதாரமற்றதாக, பற்றாக்குறையாக உள்ளது. இதனால் லிட்டர் ரூ. 10 கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் நிலவுகிறது. குடிநீர் வீணாக ரோட்டில் வெளியேறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பல முறை குரல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.