கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் அவதிப்பட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப் பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், மத்திப்பட்டி, பாப்பாகப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, மிதமான மழை பெய்து வருகிறது. வெங்காயம் முழுவதும் அழுகும் நிலையில் உள்ளது. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை நின்றால் மட்டும் அறுவடை பணி துவங்க முடியும் என, அவர்கள் தெரிவித்தனர்.