மாங்காய் வரத்து துவக்கம்; கிலோ ரூ.90க்கு விற்பனை | கரூர் செய்திகள் | Dinamalar
மாங்காய் வரத்து துவக்கம்; கிலோ ரூ.90க்கு விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
12:15

கரூர்: தை மாதம் துவங்கிய நிலையில், கல்லா மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் மாங்காய் சீசன், மார்ச் முதல் ஜூலை வரை இருக்கும். முன்னதாக, தை மாதம் முதல், கிளி மூக்கு என அழைக்கப்படும், கல்லா மாங்காய் விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து, கல்லா மாங்காய் கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வர துவங்கியுள்ளது. முதல் தரம் கிலோ, 90 ரூபாய், இரண்டாம் தரம், 60 முதல், 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.


இதுகுறித்து, உழவர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கல்லா மாங்காய் ஊறுகாய் மற்றும் ஏற்றுமதி தேவைக்காக அதிகம் விற்பனை செய்யப்படும். தற்போது, சீசன் துவங்கியுள்ளதால், 90 ரூபாய் வரை விற்கிறது. மார்ச் மாதத்தில் மற்ற மாங்காய் வகைகள் விற்பனைக்கு வரும். அப்போது, கல்லா மாங்காய் விலை குறையும். குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களில் கல்லா மாங்காய், கிலோ, 20 ரூபாய் அளவுக்கு விலை குறைந்து விடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X