தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
12:16

கரூர்: மழை காரணமாக அமராவதி ஆற்றில், இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. அதிகப்படியான தண்ணீர் வருவதால், செட்டிப்பாளையம் தடுப்பணையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கேரளா மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 4,771 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 4,750 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 88.92 அடியாக இருந்தது. அணை பகுதியில், 6 மி.மீ., மழை பெய்துள்ளது. அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, கரூர் அருகே செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு அதிகப்படியான தண்ணீர் நேற்று அதிகாலை வந்தது. இதனால், அணைப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


* க.பரமத்தி கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.43 அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆத்துப்பாளையம் அணை நாளை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 15 ஆயிரத்து, 834 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு காவிரி யாற்றில், 15 ஆயிரத்து, 684 கன அடி தண்ணீரும், மூன்று கிளை வாய்க்காலில், 170 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணை பகுதிகளில், 5 மி.மீ., மழை பெய்துள்ளது.


மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 3.2, அரவக்குறிச்சி, 10, அணைப்பாளையம், 11, க.பரமத்தி, 6, குளித்தலை, 6, தோகைமலை, 4, கிருஷ்ணராயபுரம், 4.2 மாயனூர், 5 பஞ்சப்பட்டி, 8.4, கடவூர், 12, பாலவிடுதி, 15, மயிலம்பட்டி, 3 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 7.32 மி.மீ., மழை பதிவானது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X