குளித்தலை: குளித்தலை அடுத்த, மணவாசி பஞ்., அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சுஜாதா, 48. இவர், வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ஆட்டை ஒருவர் தூக்கிக்கொண்டு சென்றார். சத்தம் கேட்டு சுஜாதா வந்து பார்த்தார். ஆடு திருடிச் சென்ற வாலிபரை பொது மக்கள் விரட்டி பிடித்தனர். கட்டளை கிராமத்தை சேர்ந்த குணசேகரன், 26, என்பது தெரியவந்தது. அவரை, மாயனூர் போலீசார் கைது செய்தனர்