குளித்தலை: வீரணம்பட்டி சமத்துவபுரத்தில், பெண்ணை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குளித்தலை அடுத்த, வீரணம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செல்வி, 37. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வீரம்மாள், 45, என்பவருக்கும், குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 10 காலை, தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் செல்வியை, வீரம்மாள் தகாத வார்த்தையால் பேசி, தாக்கியுள்ளார். வீரம்மாள் கணவர் வீரமணி, 47, மகன் மணிராஜா, 19 ஆகியோர், செல்விக்கு மிரட்டல் விடுத்தனர். மைலம்பட்டி அரசு மருத்துவமனையில், செல்வி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.