கரூர்: கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆச்சிமங்களம் அருகம்பாளையம் குளம், அரசு கலைக்கல்லூரி பின்புற குளத்தின் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரானது, மேட்டுப்பகுதியான கோடங்கிப்பட்டியில் இருந்து, ஓடை வழியாக அடித்து வரப்பட்டு இந்த குளங்களில் நிரம்பும். உபரிநீரானது தாந்தோணி ராஜவாய்க்கால் வழியாக அமராவதி ஆற்றில் கலந்து விடும். எனவே, பதிவேடுகளின்படி நேரில் ஆய்வு செய்து, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டியது அவசியம்.