ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து மழைபெய்வதால் 2 லட்சம் ஏக்கரில்பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாழாகியுள்ளது.
மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடிநடக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்குமுன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். நவ.,டிசம்பரில் நிவர், புரெவி புயல் காரணமாகமழை பெய்ததால் தற்போது நெற்பயிர்கள்பூவெடுத்தும், சில இடங்களில் நெல்மணிகள் வளர்ந்தும் உள்ளன.இந்நிலையில் கடந்த மாவட்டத்தில் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்கிறது. இதன் காரணமாக கண்மாய்கள்ஊரணிகள் நிரம்பி வருகின்றன.ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், தேவிப்பட்டனம், சிக்கல், முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி மற்றும் திருவாடானை, நயினார்கோயில் பகுதியில் கண்மாய் உடைப்பாலும் வயல்வெளியில் தண்ணீர் தேங்கி 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில்நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு 15 முதல் 20 நாட்கள் உள்ள நிலையில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால் நுாறுசதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:மாவட்டத்தில் வழக்கமாக ஜனவரில் 45 மி.மீ., மழை பெய்யும், ஆனால் இவ்வாண்டு 150 மி.மீ., வரை மழை பெய்துள்ளது. மூழ்கியுள்ள பயிர் விபரம் வருவாய்துறையினர், வேளாண் பணியாளர்கள் என அனைத்துபணியாளர்களும் பயிர்சேதம் விடுபடாமல் கணக்கில் ஈடுபட்டுள்ளனர். உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும்,' என்றார்.