உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே 2 ஆயிரம் ஏக்கர் நெல் வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில் 450 எக்டேரிலும், நல்லிருக்கையில் 480 எக்டேரிலும், பனையடியேந்தலில் 600 எக்டேரிலும், உத்தரகோசமங்கையில் 550 எக்டேரிலும் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.12 நாட்களுக்கும் மேல் விடாது மழை பெய்து வயல்களில் தேங்கிய நீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. அறுவடைக்கு தயாரான நிலையில், கொட்டும் மழையால் உரிய பலன்களை எடுக்க முடியாமலும், நீரில் முளைத்து வரும் நெல் பயிரைக்கண்டும் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.