அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் திருக்குறள் பேரவை சார்பில் பொங்கல் விழா நடந்தது.பேரவை தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். செயலாளர் சாக்ரடீஸ் வரவேற்றார். காத்தவராயன், கமலக்கண்ணன் மண்ணிசை பாடல்களை பாடினர்.திருக்குறள் ஒப்புவித்தல், நடனம், கவியரங்கம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆல்பர்ட் வேளாங்கண்ணி, மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசு வழங்கினார்.ஆசிரியர் பரிமளம், கவிஞர் அழகேசன், இ.கம்யூ., செல்வராசு, பிரபு, பழனிவேல், அன்பரசி, மகாதேவா, கோகுல்குமார், ராகுலன் ஆகியோர் பேசினர்.