விழுப்புரம் : காணும் பொங்கலையொட்டி, விழுப்புரம், வண்டிமேடு குடியிருப்பு பகுதிகளில் இரண்டாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
வண்டிமேடு வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கம், வள்ளலார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்திய போட்டிக்கு, முன்னாள் கவுன்சிலர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.செயலாளர்கள் கங்காதரன், முருகானந்தம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில், பெண்களுக்கு இசை நாற்காலி, பலுான் ஊதி கட்டி வெடித்தல், எலுமிச்சை ஸ்பூன் ஓட்டம், ஸ்கிப்பிங், பூ கட்டுதல், மாணவர்களுக்கு ஓட்டம், சாக்கு ஓட்டம், தோப்புகாரணம் போடுதல், இலக்கை குறிபார்த்தல், முதியோர்களுக்கு நடைபோட்டி நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, முன்னள் கவுன்சிலர் ராமதாஸ் பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, ஆவின் நுகர்வோர் மைய தலைவர் கவுதமன், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பாலகணபதி, மரியபிரகாசம், கருணாநிதி, லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.