விழுப்புரம் : பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பொம்மையார்பாளையம் பீச் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த சின்னதம்பி மகன் சங்கர்,52; மண்ணாங்கட்டி மகன் ராஜேந்திரன்,38; வெங்கடேசன் மகன் கோவிந்தசாமி,33; ஜானகிராமன் மகன் ரஞ்சித்குமார்,33; ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.