திருமங்கலம் : திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி, எஸ்.கோபாலபுரம், அச்சம்பட்டி பகுதி
மக்கள் உலகம் முழுவதும் 'மதுரை முனியாண்டி விலாஸ்' என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊருக்கு வந்து குல தெய்வமான
முனியாண்டி சுவாமிக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டு அனைவருக்கும் அசைவ விருந்து வழங்குவர். பெண்கள் பூக்கள், பழங்கள் நிரம்பிய தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று சுவாமிக்கு படைப்பர். இந்தாண்டு நேர்த்திக்கடன் செலுத்தி, பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கினர்.