கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், காலை 10:35 மணி முதல் 10:59க்குள். கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்
குன்றம், காலை 9:00 மணி, இரவு 7:00 மணி, யாகசாலை பூஜைகள்: காலை 8:00 மணி, மாலை 6:00 மணி. ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.
வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி. கால
பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி. காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர்,
சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. ராகு, கேதுவிற்கு பூஜைகள்: காலை 7:30 மணி.
கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.
கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி. சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு குறையொன்றுமில்லை கோவிந்தா: நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா
சவுந்தர்ராஜன், சத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:00 மணி. பொது விக்னேஷின் மிருதங்க அரங்கேற்ற விழா: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ரங்கநாயகி சச்சிதானந்தம்-வாய்ப்பாட்டு, சச்சிதானந்தம் -வயலின், ஏற்பாடு:
திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, மாலை 6:05 மணி.
மரக்கன்றுகள் நடும் பணி: தென்கால் கண்மாய் கரையோரம், திருப்பரங்குன்றம், ஏற்பாடு:
திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.
'3 எச்' குளோபல் கன்சல்டன்சி துவக்க விழா: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, காலை 11:00 மணி. முதியோருக்கு உணவு வழங்குதல்: நகர்ப்புற வீடற்றோர் இல்லம், செனாய் நகர், மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை, தலைமை: நிறுவனர் மணிகண்டன், இரவு 7:00 மணி.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா: 6வது தெரு, சொக்கலிங்க நகர், மதுரை, பங்கேற்பு: பேராசிரியை நிர்மலா மோகன், ஏற்பாடு: தாய்வீடு மாரிச்சாமி, காலை 10:00 மணி. மருத்துவ முகாம் கை, கால் இயக்கம், பார்வைத்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 8:30 முதல் பகல் 12:30 மணி.
விளையாட்டுதேசிய கால்பந்து போட்டிகள்: திருவள்ளுவர் நகர், திருநகர், ஏற்பாடு: ஆக்மி ஸ்போர்ட்ஸ் கிளப்: காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.