இருளில் மூழ்கிய பாவாலி ரோஜா நகர் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
இருளில் மூழ்கிய பாவாலி ரோஜா நகர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
05:45

விருதுநகர் : விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் ரோஜா நகர் மக்கள் அடிப்படை வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர்.



விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை சிவகாமிபுரத்தை ஒட்டியுள்ளது பாவாலி ஊராட்சி. இங்குள்ள ரோஜா நகர் சற்று தொலைவில் இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு வசதி செய்யவில்லை. அனைத்து தெருக்களும் மண் ரோடாகி மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகி நடக்கக்கூட இயலவில்லை.



மழை பெய்தால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. கவுசிகா நதியில் தேங்கும் கழிவு நீரீல் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. அன்னை சிவகாமிபுரத்தில் இருந்து ரோஜாநகர் செல்வதற்கு உள்ள பாலம் திறந்த வெளி கழிப்பிடமாக மாறிவிட்டது. குடிநீர் கிடைக்காததால் மக்கள் நீண்ட துாரம் சென்று நகராட்சி பகுதிகளில் பொதுக்குழாய்களில் இருந்து பெற்று வருகின்றனர்.தெருவிளக்கு இல்லாத தால் ரோஜா நகர் இருளில் மூழ்கி பெண்கள் நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X