ஸ்ரீவி.,யில் இருந்து வெளியூருக்கு நேரடி பஸ் இயக்க வலியுறுத்தல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஸ்ரீவி.,யில் இருந்து வெளியூருக்கு நேரடி பஸ் இயக்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
05:53

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து தேனி, விருதுநகர், திருமங்கலத்திற்கு நேரடி பஸ்கள் இயக்க வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது. இதன் வழியாக மதுரை -செங்கோட்டை பஸ்கள் அதிக அளவில் இயங்கி வருகிறது. அதிக பயணிகள் வருகையால் பஸ்களில் நெருக்கடி அதிகரிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்துாரில் ஏறும் முதியோர், கர்ப்பிணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே பயணிப்பதால் சிரமம் ஏற்படுகிறது.வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளியூர் செல்வதற்கு பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து தேனி, விருதுநகர், திருமங்கலத்துக்கு நேரடி பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X