செய்திகள் சில வரிகளில் ///// | விருதுநகர் செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில் /////
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
05:53

விளையாட்டு விழா



தளவாய்புரம்: புனல்வேலி சாலியர் சமூக இளைஞர்கள் சார்பில் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி., நாகசங்கர் தலைமை வகித்து கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 76 வயது மூதாட்டிக்கு பரிசளித்தார். தலைமை டாக்டர் கருணாகரப்பிரபு, கிராம தலைவர் மாரிமுத்து, பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்./////



பரிசளிப்பு விழா



சிவகாசி: கொத்தனேரியில் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பொங்கல் விழாவையொட்டி சிறுவர், சிறுமியர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்கு தனித்தனி விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி தலைவர் லட்சுமணபெருமாள் பரிசு வழங்கினார்./////



பொங்கல் பட்டிமன்றம்



திருச்சுழி: கிளை நூலகத்தில் இன்றைய சமூக நலத்திற்கு அடிப்படையாக அமைவது இளைஞர்களின் வேகமே. மூத்தோர்களின் விவேகமே என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் செல்லப்பாண்டியன் பேசினார். ஆசிரியை சேதுபதி, புலவர் ராஜபாண்டி, ஸ்வேதா, கவிஞர் தங்கராஜ், ஆசிரியைகள் சாந்தி, மீனாட்சி பேசினர். நடுவராக இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன் இருந்தார்.//////////



பொங்கல் கவியரங்கம்



திருச்சுழி: கிளை நுாலகத்தில் நடந்த கவியரங்கத்திற்கு ஒய்வு வேளாண் அலுவலர் லட்சுமி தலைமை வகித்தார். கவிஞர்கள் ராஜேஸ்வரி, லதா, ராஜராஜேஸ்வரி, செல்வம், மணிகண்டன் கவிதைகள் வாசித்தனர். நுாலகத்துக்கு மதுரை சுவாமிநாதன் நேதாஜி, சுபாஸ் சந்திர போஸ் புத்தகங்களை வழங்கினார். மதுரை போலீஸ் எஸ்.ஐ., முருகுசுந்தரம், முருகேசன், செல்லத்துரை, நூலக பணியாளர் பாண்டி தேவி, முகில் கலந்து கொண்டனர். நூலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.



மழைக்கு இடிந்த வீடு



காரியாபட்டி: பனைக்குடியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பாக்கியராஜின் ஓட்டு வீடு, பாம்பாட்டியில் அழகர்சாமி, துரைராஜ், தங்கராஜ், சீனி, பாப்பாத்தி, பாப்பா, வெங்கடசாமி, நாராயணன் ஆகியோரின் மண் வீடுகள் இடிந்தன. உயிர் சேதம் ஏற்படவில்லை. நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X