விருதுநகர் : விருதுநகரில் எம்.பி.,மாணிக்கம் தாகூர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அழைப்பின் பேரில் தான் ராகுல் கலந்து கொண்டார். ஓட்டுக்காக வரவில்லை.
அமைச்சர் உதயகுமாருக்கு தமிழர், விவசாயிகள் குறித்து தெரியாது. காமெடி நடிகர் வடிவேல் இடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிடித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்.மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
நெல், மக்காச்சோளம் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சிவகாசியில் ரயில்வே மேம்பால பணி அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.