பல்லடம்:பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியினர் தினமும் பல்லடம், திருப்பூர் சென்று வருகின்றனர். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இன்றி வெயிலில், மழையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'வாவிபாளையம் பஸ் ஸ்டாப்பில் ஏற்கனவே இருந்த நிழற்குடை சேதம் அடைந்ததாக கூறி அகற்றப்பட்டது. புதியதாக அமைக்கப்படும் என்று கூறி, பல மாதங்கள் ஆகிறது.நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் காத்திருக்க வேண்டி உள்ளது. ரோட்டின் இருபுறமும் உள்ள பஸ் ஸ்டாப்பில், நிழற்குடை அமைக்க வேண்டும்,' என்றனர்.