குடியிருப்பு பகுதியில் பாம்பு நடமாட்டம்! பொதுமக்கள் அச்சம்; குறைதீர் முகாமில் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
01:02

திருப்பூர்:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுப்பதற்காக, பொதுமக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.பொதுமக்கள் அளித்த மனுக்களின் விவரம் வருமாறு:மடத்துக்குளம் தாலுகா தார்பட்டியை சேர்ந்த மக்கள், நீண்ட நாட்களாக வசிக்கும் பகுதியில், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; அடிப்படை வசதியை மேம்படுத்தி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று மனு கொடுத்தனர்.


பொங்கலுார் பெரியார் நகர் மக்கள், '15 ஆண்டுகளாக, ஏழை, எளிய குடும்பங்கள் என்.என்., புதுார் பெரியார் நகரில் வசித்து வருகிறோம். பட்டா இல்லாததால், அடிப்படை வசதி செய்யப்படவில்லை. தெருவிளக்கு இல்லாமல், குழந்தைகளை அடிக்கடி பாம்பு கடித்து விடுகிறது. எனவே, பட்டா வழங்கி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்' என்று மனு அளித்தனர்.l திருப்பூர் வடக்கு தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்தமனுவில், 'அங்கேரிபாளையம் ரேஷன் கடையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விற்பனையாளர், மீண்டும் கடைக்கு வந்து, புதிய பணியாளருடன் சேர்ந்து முறைகேடு செய்து வருகிறார். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை,' என்று தெரிவித்துள்ளனர்.l மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கொடுத்த மனுவில், 'பல்லடத்தில் இருந்து 'பி4' என்ற டவுன் பஸ் வருவதில்லை. மார்க்கெட் செல்லும் விவசாயிகள் பாதிப்பதால், மீண்டும் பஸ் இயக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.l சாமுண்டிபுரம் பா.ஜ., நிர்வாகி நடராஜன் கொடுத்த மனுவில், 'மாநகராட்சியின், 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், சாக்கடை துார்வாராமல், இரண்டு அடி துாரம் கழிவு தேங்கியுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் நடக்கிறது. அனைத்து சாக்கடை கால்வாயையும் துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X