'ஐ.டி., விங்க்' வலு சேர்க்கும்! அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'ஐ.டி., விங்க்' வலு சேர்க்கும்! அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
01:08

திருப்பூர்:''தகவல் தொழில்நுட்ப அணி, அ.தி.மு.க.,வின் உயிரோட்டமான அமைப்பாக மாறியுள்ளது,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.திருப்பூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் பாசறை பயிற்சி கூட்டம், நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து பேசுகையில், ''தகவல் தொழில்நுட்ப அணி, கட்சியின் உயிரோட்டமான அமைப்பாக மாறியுள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், சமூக வலைதள பிரசாரம் மூலம், மக்களின் ஆதரவை திரட்டி, வெற்றிக்கு வலுசேர்க்க வேண்டும்,'' என்றார்.எம்.எல்.ஏ., குணசேகரன், அமைப்பு செயலாளர் சிவசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பிரேம் உட்பட பலர் பேசினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X