திருப்பூர்:திருப்பூரில் இரு தரப்பினர் மோதி கொண்டதில், காயமடைந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.திருப்பூர், 60அடி ரோட்டை சேர்ந்த ஜீவா, ரவி, ரஞ்சித்குமார் ஆகியோரும், கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த கண்ணன், கார்த்திக், ஆனந்த் கடந்த 16ம் தேதி இரவு, குமரானந்தபுரம் பகுதியில் மோதி கொண்டனர். ரோட்டோர கடையில் இருந்த கரும்பு கட்டை பிரித்து, கரும்பு எடுத்தது தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது.இதில் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோதலில் படுகாயமடைந்த ரவி, 33 கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.