திருப்பூர்:திருப்பூர், இடுவம்பாளையம் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள ஒரு கடையில், 15 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.ராஜஸ்தானை சேர்ந்த வாகாராம், 56 மற்றும் ஒடிசாவை சேர்ந்த பிரபாஸ், 32 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.