உடுமலை:ஆசிரியர்களுக்கான அறிவியல் தொழில்நுட்ப திருவிழா, 'ஆன்லைனில்' நடத்த ராமன் அறிவியல் தொழில்நுட்பமையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ராமன் அறிவியல் தொழில்நுட்ப மையம்மற்றும் தேசிய ஆசிரிய விஞ்ஞானிகள் குழு சார்பில், தேசிய அளவிலான அறிவியல் தொழில்நுட்ப திருவிழா நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு எளிமையான முறையில், அறிவியலை கொண்டு சேர்க்க ஆசிரியர்களுக்கு இந்த திருவிழா நடத்தப்படுகிறது.விரிவுரைகள், கண்காட்சிகள், பட்டறைகள், நேரடி செயல்விளக்கம் மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.ஆசிரியர்களுக்கானஅறிவியல் போட்டிகளும் இடம் பெறுகின்றன.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு,ஜூனியர் பிரிவாகவும், ஒன்பது மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரை, சீனியர் பிரிவாகவும், அறிவியல் தொழில்நுட்ப மாதிரி சமர்ப்பித்தல், அறிவியல் தொழில்நுட்ப வினாடி வினா, பேச்சுப்போட்டிகள், கற்றல், கற்பித்தல் முறைகளில் புதுமைகள், செயல்திட்டம்சமர்ப்பித்தல் நடத்தப்பட உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு, நாளை (20ம் தேதி) வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பதிவு செய்வதற்கு,கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், 99424 67764 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.