பி.ஏ.பி., திட்ட காண்டூர் கால்வாயில் விழுந்தது பாறை!நீர் நிறுத்தம்; அகற்றும் பணி தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
02:09

உடுமலை:மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயில், மிகப்பெரிய பாறை சரிந்து விழுந்ததால், தண்ணீர் நிறுத்தப்பட்டு, அகற்றும் பணி நடந்து வருகிறது.பி.ஏ.பி.,பாசன திட்டத்தின் கீழ், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, 49 கி.மீ., நீளமுள்ள காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து, சேகரிக்கப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.காண்டூர் கால்வாய் முழுவதும் மலைப்பகுதி வழியாக வருவதோடு, பல இடங்ககளில் மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக நீர் வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு பகுதியில் கடந்த வாரம் கன மழை பெய்தது.இதனால், நல்லாறு ெஷட்டர் அருகே, 36வது கி.மீ.,ல், மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதோடு, மலைமேலிருந்து மிகப்பெரிய பாறை உருண்டு வந்து, காண்டூர் கால்வாயில் நேற்றுமுன்தினம் இரவு விழுந்துள்ளது.மேலும், மலைப்பகுதியில், மண் சரிவு ஏற்பட்டு, இரு இடங்களில், 20 மீட்டர் நீளத்திற்கு, கால்வாய் முழுவதும், மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்டுள்ளது.இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது; நீர் வந்து கொண்டிருந்த நிலையில், கால்வாய் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. காண்டூர் கால்வாயில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி நேற்று காலை துவங்கியது.ஏறத்தாழ, 7 மீட்டர் உயரம்; 10 மீட்டர் அகலம் கொண்ட, மிகப்பெரிய பாறையாக உள்ளதால், கம்ப்ரசர் வாகனம் கொண்டு வரப்பட்டு, பொக்லைன் வாகனம் மூலம் அகற்ற திட்டமிடப்பட்டு, பாறை உடைக்கும் பணி நடந்து வருகிறது. முழுவதும் மலைப்பகுதி, மிகப்பெரிய சரிவான பகுதி என்பதால், இந்த கடினமான பணியில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல நாட்களாக பெய்த கன மழையால், மலைப்பகுதியில், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைமேலிருந்து, மிகப்பெரிய பாறை உருண்டு வந்து, காண்டூர் கால்வாயில் விழுந்துள்ளது. கால்வாய் முழுமையாக பாறை, மண் அடைத்துள்ளது.இவ்வாறு, இரு இடங்களில், பாறைகள் உருண்டும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால், அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இரு நாட்களில் பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமூர்த்தி அணையில், திருப்தியான அளவு நீர் இருப்பு உள்ளதால், மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் இல்லை.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X