வால்பாறை:இடம் மாறிய வழிகாட்டு பலகையால், வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் தடுமாறுகின்றனர். சுற்றுலாபயணிகள் அதிக அளவில் வந்து செல்லும், வால்பாறையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆழியாறு முதல் வால்பாறை வரை, பல்வேறு இடங்களில் வழிகாட்டு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு பலகையில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டிய இடம், துாரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை நகர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்க வேண்டிய வழிகாட்டு பலகை தவறுதலாக மூன்று ரோடுகள் பிரியும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வழித்தடம் மாறி செல்லும், சுற்றுலா பயணிகள், குறிப்பிட்ட துாரம் அந்த ரோட்டில், சென்று விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இந்த வழிகாட்டுப்பலகையை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வைத்தால் மட்டுமே சுற்றுலாபயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.