புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே கடலில் மூழ்கிய வாலிபர் உடல் கரை ஒதுங்கியது.குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்குமார், 23; டிப்ளமோ படித்துள்ள இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் செல்வகணபதி, 23; சுபாஷ்காந்தி, 21; ஆகியோருடன் கடந்த 16ம் தேதி, புதுச்சத்திரம் அடுத்த பேட்டோடை கடலில் குளித்தார்.அப்போது, ராட்சத அலையில் சிக்கி அருண்குமார் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மற்ற இருவரும் பத்திரமாக கரைக்கு திரும்பினர். அப்பகுதி மீனவர்கள் மற்றும் போலீசார் தேடிய நிலையில், நேற்று அருண்குமார் உடல் சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.