நெய்வேலி; என்.எல்.சி.,யில் ஐ.டி.ஐ., அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் வேலை கேட்டு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி அண்ணா திடலில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தைத் துவக்கினர். மகன்களுக்கு வேலை வேண்டும் என்று முதியோர்களும், கணவனுக்கு வேலை வேண்டும் என்று பெண்களும் பதாகைகள் ஏந்தி ஈடுபட்டனர்.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., போராட்டக் குழுவினரை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.,க்கள் கணேசன், சரவணன் ஆகியோரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., - பா.ம.க., - வி.சி., என அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.கடந்த 26 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபடும் இவர்களுக்கு எந்த ஆட்சியிலும் வேலைகிடைக்கவில்லை.