சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில் நிக்கால் ஸ்லீல் கெமிக்கல் அண்டு மெட்டீரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி நிர்மலா மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.அதில் சி.எஸ்.இ., - இ.சி.இ., ஆகிய துறைகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் பங்கேற்று அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.அதே போன்று, சென்னை, ஸ்ரீபெரும்புதுார் புளூ ஓஷியன் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி தேஜா, நேர்காணல் நடத்தினார். அதில் 34 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தேர்வான மாணவர்களுக்கு கல்லுாரியின் சேர்மன் கதிரவன் வாழ்த்து தெரிவித்தார்.கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் உடனிருந்தனர்.