கடலுார்; மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம், செவித்திறன் குறைவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல் போன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை கல்வி பயிலும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர், சுய தொழில் புரியும் தனியார் துறையில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைவுடையவர்கள் மொபைல் போன் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் நகல்கள், தனியார் துறையில் பணிப்புரிபவர்க்கு பணிச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு அட்டை, சுய தொழில் புரிபவர், புகைப்படம் ஆகியவைகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், கடலுார். என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ வரும் 22ம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.