நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஒளிப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.சங்க கவுரவ தலைவர் அம்சா பாஸ்கரன் தலைமை தாங்கினார். தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். வைரஜோதி பள்ளி தாளாளர் சங்கர் நாராயணன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.துணைத் தலைவர் ஜெகன்நாத், மேல்பட்டாம்பாக்கம் தலைவர் சங்கர், செயலாளர் ரீகன், சூசை உட்பட பலர் பங்கேற்றனர். யோகா பயிற்சி ஆசிரியர் ஜெய்சங்கர் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்தார்.