திட்டக்குடி; திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இப்பள்ளியில், கடந்த 1990ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் டாக்டர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சதாசிவம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர், திருச்சி ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 22 ஆண்டுகளுக்குப்பின் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சியை கோபிநாத், ரமேஷ், செழியன் ஒருங்கிணைத்தனர். விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.