அன்னுார்:அன்னுார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை, காங்., கட்சியினர் முற்றுகையிட்டனர்.அன்னுாரில், தென்னம்பாளையம் சாலையில், கூட்டு குடிநீர் திட்டத்துக்காக, குழாய் பதிக்கும் பணிகள், பல மாதங்களாக நடக்கின்றன. சேதமடைந்த சாலை சரி செய்யப்படவில்லை. நான்கு நாட்களாக, தென்னம்பாளையம் சாலையில், போலீசார் போக்குவரத்தை தடை விதித்துள்ளனர். இருசக்கர வாகனத்திற்கு மட்டும்அனுமதி அளித்துள்ளனர். நேற்று காங்., கட்சியினர், மாநில பேச்சாளர் காளிச்சாமி தலைமையில், மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'பல மாதங்களாக, தென்னம்பாளையம் சாலை, குமாரபாளையம் வரை மிகவும் மோசமாக உள்ளது; சரி செய்யப்படவில்லை. தினமும் விபத்துகள்ஏற்படுகின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 'சாலை சீரமைக்கும் பணி உடனடியாக நடைபெறும். புதன்கிழமைக்குள் போக்குவரத்துக்கு பாதை திறந்து விடப்படும்' என, உறுதியளித்தனர். இதையடுத்து காங்., கட்சியினர் கலைந்து சென்றனர்.