பெ.நா.பாளையம்:சின்னதடாகம் வட்டாரத்தில், ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.கோவை புறநகர் வடக்கு பகுதியில், மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளை கட்டுப்படுத்த, இதுவரை வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. இதனால், தினசரி இரவு முதல் அதிகாலை வரை, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒருங்கிணைந்து, மலையோர கிராமங்களில் ஊடுருவும் காட்டு யானைகளை, மீண்டும் வனத்துக்குள் திருப்பி அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், அங்குள்ள வீரபாண்டிபுதுார் சாலையில், நள்ளிரவு, ஒற்றை யானை சென்றது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.