விதிகளை பின்பற்றினால் விபத்து தவிர்க்கலாம்! வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
04:46

'விதிகளைப் பின்பற்றினால் விபத்துக்களை தவிர்க்கலாம்' என, தேசிய சாலை பாதுகாப்பு பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது.அன்னுாரில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. அன்னூர் போலீஸ் ஸ்டேஷன் முன், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். இருசக்கர வாகனங்களில், போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என, 50 பேர், கோவை சாலை, பிரதான சாலை உட்பட முக்கிய சாலை வழியாக சென்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வினியோகித்த துண்டு பிரசுரத்தில், 'சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, உறுப்பு இழப்பு, கொடுங்காயம் ஆகியவற்றால், மனதளவிலும், பொருளாதார ரீதியிலும், பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கின்றன.எனவே, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். இருசக்கர வாகனம் இயக்கும் போது, தலைக்கவசம் அணிய வேண்டும். கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம். வாகனம் இயக்கும் போது மொபைல் பயன்படுத்தக்கூடாது. மது அருந்திவிட்டு இயக்கக் கூடாது. வளைவுகளில் முந்திச் செல்லக்கூடாது. அதிவேகத்தில் செல்வது விபத்துக்கு வழிவகுக்கும். சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது.* மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, காரமடை அருகே நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் பேசினார்.வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்கி வந்தவர்களுக்கு, ரோஜாவும், சாக்லேட்டும் வழங்கினர். ஹெல்மெட் அணியாமல் இயக்கி வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், செல்வராஜ், எஸ்.ஐ.,க்கள் திலக், நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி மற்றும் போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்
-நிருபர் குழு - .

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X