பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 40 டன் அரசு மானிய யூரியா மூட்டைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள குடோனில், மானிய விலை் யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் தெரியவந்தது.பொள்ளாச்சி தாசில்தார் தணிகைவேல், வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி, வேளாண் அலுவலர் துளசிமணி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 905 மூட்டைகளில், 40 டன், அரசு மானிய யூரியா உரம் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.மாற்றுப்பெயர்களில், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏஜன்ட் வாயிலாக மானிய உரத்தை வாங்கியுள்ளனர். அதை, 'டெக்னிக்கல் கிரேடு யூரியா', 'நைட்ரோ' என்ற பெயர்களில், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தி, விற்பனை செய்து வந்தனர். ஒரு மூட்டை (45 கிலோ) 1,400 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ' கடத்திலில் தொடர்புடைய பொள்ளாச்சிமும்மூர்த்தி, சந்தோஷ் தப்பி விட்டனர்.குடோனில், 9,050 சாக்கு பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4,393 பைகளில் உரம் கொண்டு சென்று விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது' என்றனர்.