திருநெல்வேலி:ஊர் நாட்டாமை மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே செந்தட்டியாபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம், 54. அவரது சமூகத்தினரால் ஊர் நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டார்.இது தொடர்பாக சிலரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர் பைக்கில் விருதுநகர் மாவட்டம் எல்லையான குன்னக்குடி அருகே வந்த போது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.கரிவலம்வந்தநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.