கூவத்துார்; கொடூர் பகுதியில், குடிநீர் ஏரியில், கழிவு நீர் விட்ட லாரியை, பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த, கொடூர் பகுதியில், குடிநீர் நீராதார தேவைக்காக, கடந்த ஆண்டு, புதிதாக உருவாக்கிய, குளம் உள்ளது. இதில் அமைத்துள்ள கிணற்றிலிருந்து, கரிக்காமலை பகுதியினருக்கு, குடிநீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தனியார் டேங்கர் லாரியில் எடுத்து வரப்பட்ட கழிவு நீர், குளத்தில் விடப்பட்டதை, பொதுமக்கள் பார்த்தனர்.இதையடுத்து அவர்கள், லாரியை பிடித்து, கூவத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.