மாமல்லபுரம்; மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்கள், மீண்டும் திறக்கப்பட்டன.மாமல்லபுரத்தில், பல்லவர் கால, தொல்லியல் சின்னங்களை, சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் மாதம், தொல்லியல் சின்னங்கள் மூடப்பட்டன. தளர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை விடுமுறையில், வைரஸ் தடுப்பு கருதி, பயணியர் குவிவதை தடுக்க, கடந்த, 15ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, தமிழக அரசு, சுற்றுலா தடைவிதித்ததால், தொல்லியல் சின்னங்கள் மூடப்பட்டன.இந்நிலையில், நேற்று, வழக்கம்போல், தொல்லியல் சின்னங்கள் திறக்கப்பட்டு, குறைந்தளவு பயணியரே வந்து, சிற்பங்களை பார்வையிட்டனர்.