செய்யூர்; செய்யூர் அருகே, அரசு டாஸ்மாக் கடை மேலாளரை வழிமறித்து, 7.25 லட்சம் ரூபாய் பறித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.செய்யூர் அடுத்த, இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 46. இவர், மதுராந்தகம் அடுத்த பாலுார் டாஸ்மாக் கடை மேலாளர்.நேற்று முன்தினம், பணி முடித்து, மதுபாட்டில் விற்ற, 7.25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, நண்பர் சங்கர் என்பவருடன், இரவு, 11:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.அம்மனுார் கிராம சாலை அருகே, சுரேஷ் வாகனத்தை வழிமறித்த, மர்ம நபர்கள் நான்கு பேர், கத்தியால் அவரது முகம், தோள்பட்டையில் வெட்டி, அவரிடமிருந்த, 7.25 லட்சம் ரூபாயை பறித்துச்சென்றனர்.இது குறித்து, சுரேஷ் அளித்த புகாரின்படி, வழிப்பறி செய்த மர்ம நபர்களை, செய்யர் போலீசார் விசாரிக்கின்றனர்.