செங்கல்பட்டு; செங்கல்பட்டு மாவட்டம், காந்தலுார் கல்குவாரி குட்டையில் குளித்தபோது, நீரில் மூழ்கி, மூன்று பேர் இறந்தனர்.சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் தமீம் அன்சாரி, 28. இவர், அவரது உறவினர்களான யாஸ்மின் பஜனா, 17, அவரது தாய், தோழிகள் சம்யுக்தா, 17, ஏஞ்சல், 17, ஆகியோருடன், செங்கல்பட்டு, காந்தலுார் கிராமத்திற்கு நேற்று வந்தார்.அங்குள்ள கல்குவாரி குட்டையில், மதியம், 12:30 மணிக்கு அனைவரும் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதியில் குளித்த தமீம் அன்சாரி, சம்யுக்தா, ஏஞ்சல் ஆகியோர், தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மற்ற இருவரின் தகவலையடுத்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.