திருமங்கலம் : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருமங்கலம் மோட்டார்வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதிதாக லைசென்ஸ் வாங்க வந்த வாகன ஓட்டிகள் உட்பட அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலம் தென்றல் அரிமா சங்கம் சார்பில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் செந்தில்நாதன், செயலாளர் இளங்கோ, பொருளாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கசெயலாளர் முரளிதரன் ஆலோசனை வழங்கினார்.