ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் வீரர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் சாலையை ஒட்டிய பகுதியில் மரங்களுக்கு நடுவே நான்கு அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.விளையாட்டு மைதானம்முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறுவிளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.