ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா துவக்கநிகழ்ச்சியில்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.எஸ்.பி., கார்த்திக் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்சேக் முகம்மது வரவேற்றார்.விழாவில் ஹெல்மெட் இல்லாமல் வந்த டூவீலர் ஓட்டிகள் 30 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.