சிக்கல் : சிக்கல் அருகே வாலிநோக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1982ல் கட்டப்பட்ட இப்பள்ளியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கட்டடம் மூடப்பட்டுள்ளது.
குடிமகன்கள் சிலர் அவ்விடத்தை குடிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால்,பள்ளியின் நுழைவுப்பகுதி, சுற்றுப்பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதோடு பள்ளி பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.