ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் 2020ம் ஆண்டில் 219 பேர் உயிரிழந்துள்ளதாக, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு மாதவிழாவில் அவர் கூறியதாவது:அனைவரும் 18 வயது பூர்த்தியாகி வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்களை ஓட்ட வேண்டும். மதுஅருந்தி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல், அலைபேசியில் பேசியபடி ஓட்டுதல்,அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். டூவீலர் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம்.
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும் போது விபத்து ஏற்பட்டு உயிர்இழப்பு ஏற்படுகிறது. 2020ல் மாவட்டத்தில் 1022 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 206 விபத்துக்களில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். 816 விபத்துக்களில் 1113 பேர் காயம் அடைந்துஉள்ளனர்.இதனை தவிர்த்து 100 சதவீதம் விபத்தில்லா மாவட்டமாக்க மக்கள் முன் வர வேண்டும், என்றார்.