தேவிபட்டினம் : தேவிபட்டினம் ஆர்.சி., காலனி பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மகன் சம்சத் அலி 32, இவர் தடை செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்களான அடல் அட்டைகளை வீட்டில்பதுக்கி வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல உள்ளதாக, தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் தெற்கு தோப்பில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்து, 20 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 26 உயிருடன் கூடிய அட்டைகளையும் பறிமுதல் செய்து சம்மத் அலியை கைது செய்தனர்.