போலீஸ் டைரி....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
05:46

பெண் துாக்கிட்டு தற்கொலைதிருவேற்காடு: திருவேற்காடு, பல்லவன் நகர், இரண்டாவது அவென்யூவைச் சேர்ந்தவர் அமர்நாத், 34; தனியார் ஊழியர். இவரது மனைவி ராஜலட்சுமி, 30. இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தேவ் ஆனந்த், 2, என்ற குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் மனமுடைந்த ராஜலட்சுமி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, மூன்று ஆண்டுகளே ஆவதால், வருவாய் துறையினரும் விசாரிக்கின்றனர்.பெண்ணுக்கு தொல்லைசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார், 24. இவர், நேற்று மாலை, 3:00 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குளியல் அறையில் குளிப்பதை எட்டிப் பார்த்தார். இதனால் கோபமடைந்த, அந்த பெண்ணின் கணவர், அஜித்குமாரை தட்டிக் கேட்டார். உடனே அஜித்குமார், கத்தியைக் காட்டி, 'கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார். செங்குன்றம் போலீசார், அஜித்குமாரை கைது செய்தனர்.அமெரிக்க மாப்பிள்ளைக்கு 'கம்பி'அண்ணா சாலை: ராயப்பேட்டையைச் சேர்ந்த, 29 வயது இளம்பெண்ணும், விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தன், 33, என்பவரும், 2016ல் திருமணம் செய்து, அமெரிக்காவில் வாழ்ந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்காவிலுள்ள நீதிமன்றத்தில், 2019 டிசம்பரில், இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வந்த இளம்பெண், வரதட்சணை கேட்டு, கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக, அண்ணா சாலை, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று முன்தினம், சென்னை வந்த வசந்தனை, விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர்.மாமியாரை அடித்த மருமகன் கைதுஆர்.கே.நகர்: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் பாப்பம்மாள், 60. இவரது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், 29, என்பவருக்கும், திருமணமாகி, ஒரு மாதத்திற்கு முன் குழந்தை பிறந்தது. குடிபோதையில், நேற்று முன்தினம், பாப்பம்மாள் வீட்டிற்கு சென்ற செந்தில், மனைவியை தன் வீட்டிற்கு அனுப்புமாறு, தகராறு செய்துள்ளார். அப்போது, பாப்பம்மாளுக்கும், செந்திலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செந்தில், பாப்பம்மாளை அடித்து, ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியுள்ளார். பாப்பம்மாள் கொடுத்த புகாரின்படி, ஆர்.கே.நகர் போலீசார், நேற்று செந்திலை கைது செய்தனர்.மொபைல் திருடிய இருவர் சிக்கினர்சென்ட்ரல்: சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மொபைல் போன்கள் திருடு போயின. தொடர் திருட்டு நடந்ததால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இன்ஸ்பெக்டர் தர்மா தலைமையிலான போலீசார், மருத்துமவனை, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சத்யராஜ், 36; அவரது நண்பர் கொடுங்கையூர் ஜாகீர் உசேன், 47, ஆகியோர், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X