பரமக்குடி : கொரோனா பரவலை காரணம் காட்டி, கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் கழிப்பறை வளாகம் திறக்கப்படாததால் குழந்தைகள்மற்றும் முதியோர் உள்ளிட்ட பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரை - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தில் பரமக்குடி ஸ்டேஷன் உள்ளது. பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இந்த ஸ்டேஷனை பயன்படுத்தி வருகின்றனர்.50 கி.மீ., தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை இதுவரை செயல்பாடின்றி உள்ளது.ஆகவே ரயில்வே நிர்வாகம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.