பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
11:20

ஈரோடு: நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி, ஈரோட்டை சேர்ந்த தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் பாஷா, மத்திய ரயில்வே அமைச்சர், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து குஜராத் கெவாடியாவுக்கு, வல்லபபாய் பட்டேல் சிலை உள்ள இடத்துக்கு ரயில் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். அதேசமயம், கொரோனாவை காரணம் காட்டி, ஈரோடு - கோவை, கோவை - சேலம், ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் சேவை, இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. திருநெல்வேலி பயணிகள் ரயில் இயங்காததால், கொடுமுடி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், கோவில்களுக்கும் செல்வோர் பாதித்துள்ளனர். ஏழைகள் பயன் பெறும் பயணிகள் ரயிலை, முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X